திங்கள்நகர் பஸ் ஸ்டாண்டில் கடை உடைத்துக் கொள்ளை !
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே கடை உடைத்துக் பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 12:32 GMT
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பட்டன் விளையை சேர்ந்தவர் ரவீந்திரன் (55). இவர் இரணியல். பேரூராட்சியில் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர். தற்போது காமராஜர் பஸ் நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை சுமார் 8 மணியளவில் கடை திறக்க வந்தார். அப்போது கடை முன்ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரத்தை காணவில்லை. இதை பேரூராட்சிக்கு வாடகை செலுத்துவதற்காக வைத்திருந்தார். இது குறித்து ரவீந்திரன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தை வந்து ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.