தாய் மகள் மாயம்

திண்டுக்கல் மாவட்டம்,பஞ்சயம்பட்டியில் மகளுடன் மாயமான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-24 01:01 GMT

தாய் மகள் மாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள பஞ்சயம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். (32). இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). இவர்களுக்கு யாசினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் இருந்தவர் மகளுடன் மாயமாகி விட்டார்.

பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து பெண்ணின் கணவர் நத்தம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மகளுடன் மாயமான தாய் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News