சிவன்மலை அருகே ஆண் சடலம்; போலீசார் விசாரணை

சிவன்மலை பாறையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண்சடலம் காணப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;

Update: 2024-05-28 03:17 GMT

சிவன்மலை பாறையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் காணப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை பஞ்சாயத்தை சேர்ந்த வேலன் நகர் பகுதியில் சிவன்மலை கல்லேரி சாலையில் சின்னமலை காடு என்ற சிறிய குன்று ஒன்று உள்ளது. இந்த மலையை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு சுற்றளவிற்கு எந்தவொரு வீடுகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்து வருகிறது. சாலையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் குன்றின் அடிவாரத்தில் உள்ள பாறைகளிலின் மீது சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்த ஆணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி கால்நடை மேய்ப்பவர்கள் காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

Advertisement

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கேயம் போலிசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அடையாளம் தெரியாத அந்த ஆணிற்கு சுமார் 55 வயது என்றும் நரைத்த தலைமுடியுடன் கூடியவர் என்றும் இவர் சுமார் 5 நாட்களுக்கு முன்பு இந்த காட்டுப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.மேலும் இவரது இறந்த உடலுக்கு அருகில் சல்பாஸ் மாத்திரை, பீடி கட்டுகள், வாட்டர் பாட்டில்கள், இவர் வந்த மோட்டார் பைக், செருப்பு தொப்பி ஆகியவை கிடந்துள்ளதையும் போலிசார் கைப்பற்றியுள்ளனர். இறந்தவர் தற்கொலையா அல்லது கொலை செய்து இப்பகுதியில் வீசப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News