வாலிபரை கொலை செய்த மர்மநபர்கள் - போலீசார் விசாரணை !
பெருமுக்கலில் வாலிபரை மர்மநபர்கள் கொலை செய்து குட்டையில் மூழ்கவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-19 06:30 GMT
பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் காமட்சியம்மன் கோவில் அருகே உள்ள சுப்பாயி குட்டை மேல் இருந்த கற்கல் மீது ரத்தக்கரை இருந்துள்ளது. இந்த ரத்தகரையை நேற்று மதியம் 3.30 மணிக்கு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அதிர்ச்சியடைந்து சந்தேகத்தின் பெயரில் பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்இன்ஸ்பெக்டர் சத்தீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியோடு சுப்பாயி குட்டை தண்ணீரில் மூழ்கி தேடி பார்த்தனர். அப்பொழுது சடலம் தண்ணீரில் இருந்து மேல் நோக்கி வராமல் இருக்க வாலிபர் மீது பெரிய கற்களை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த வாலிபர் பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த ராகவன் மகன் மணியரசு,30 டிப்பர் டிரைவர் என்பது தெரியவந்தது. இவரை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.