ஏரியில் வாலிபர் உடல் போலீசார் விசாரணை
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி ஏரியில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
Update: 2024-01-19 05:28 GMT
ஏரியில் வாலிபர் உடல்
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி ஏரியில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி பெரிய ஏரியில் கடந்த 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார், ஏரியில் இருந்து உடலை மீட்டு, இறந்த வாலிபர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.