வெயிலை சமாளிக்க காவல்துறையினர் தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கல்

வெயிலை சமாளிக்கும் விதமாக திருச்சி மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, குளிர்பானம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-19 09:35 GMT

வெயிலை சாமாளிக்க காவல்துறையினர் தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கல்

மழை, வெயில் என பார்க்காமல் தினசரி நாள் முழுவதும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். கோடை, மழை காலங்களில் கடும் சிரமத் துக்கிடையே பணியாற்றி வருகின்றனர். கோடை காலத்தின்போது போக் குவரத்து போலீசாருக்கு தொப்பி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல் வேறு சிரமத்துக்கிடையே போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் 50 போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை தடுக்கும் வகையிலான தொப்பி, மோர்,குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலைநடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமை வகித்து போலீசாருக்கு தொப்பி. மோர், குளிர்பானங்களை வழங்கினார், திருச்சி மாநகரில் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு படிப்படி யாக தொப்பி, குளிர்பானங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓரளவு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
Tags:    

Similar News