குழந்தைகள் கடத்துவதாக பதிவிட்ட பேஸ்புக் குழு மீது போலீசார் வழக்கு பதிவு
கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் குழந்தைகள் கடத்துவதாக பதிவிட்ட பேஸ்புக் குழு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-08 12:05 GMT
வழக்கு பதிவு
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆதனூரில் கடந்த நான்காம் தேதி குழந்தைகளை கடத்த முற்பட்டதாக இருவரை கிராமமக்கள் பிடித்து சுவாமிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அது தவறான தகவல் என தெரிந்து இருவரையும் போலீசார் விடுவித்தனர்.
இந்நிலையில் "நம்ம ஊரு கும்பகோணம்" என்ற பேஸ்புக் குழுவில் கும்பகோணம் அருகே சுவாமிமலைப் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், சுவாமிமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமானால் பதிவிடப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்தக் குழுவில் அதுபோன்று பதிவிட்டவர்கள் யார், குழு அட்மின் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.