ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

ஆத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து பேசிய அதிமுக வேட்பாளர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-04-14 09:31 GMT

அதிமுக வேட்பாளர் 

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளர் குமரகுரு போட்டியிடுகிறார். இத்தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு பகுதிகளில் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி, ஆத்தூர், கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் குமரகுரு, அதிமுகவிற்கு ஓட்டு போடும் நபர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் 25 காசு கொடுத்தால் நீங்கள் 50 காசு கொடுத்து ஓட்டை பெற வேண்டும் என பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து முல்லைவாடி விஏஓ கோபிநாத், ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது, இரண்டு பிரிவுகளில், தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News