மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் வலைவிச்சு
மளிகை கடையில் கதவின் பூட்டு உடைந்து 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு இது குறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 09:59 GMT
மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டு
மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சமத்துவபுரம் எதிரே மளிகை கடை நடத்தி வருபவர் சிவகுமார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டி விட்டு சென்று உள்ளார். இதையடுத்து நேற்று காலை கடையை திறக்க வரும்போது. கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையின் உள்ளே திறந்து பார்க்கும் போது சிகரெட், பீடி என ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவரின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து சிவகுமார், விக்னேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.