போக்குவரத்து சீர் செய்ய, விபத்துக்கள் தடுக்க,போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

போக்குவரத்து சீர் செய்ய, விபத்துக்கள் தடுக்க,போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

Update: 2024-07-15 07:34 GMT

மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைக்க, விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் தொகுதியில் போக்குவரத்து போலீஸ் குறைவாக இருப்பதால், சில இடங்களில் சாலைப் பாதுகாப்புக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், கத்தேரி பிரிவு, கவுரி பைபாஸ் ஆகிய பகுதிகளில் காலை, மாலை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதால், காவல்துறை பணிக்கு ஆட்களை அதிகப்படுத்தி குமாரபாளையம் நகராட்சி 31வது வார்டு கவுரி பைபாஸ் அருகில் தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் லாரிகள் மற்றும் பேருந்துகள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகம் நடப்பதுடன் உயிர் சேதமும் ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்படுகிறது. சாலைகளை எளிதாக கடந்து செல்லவும், காலை 08.30 மணி முதல் 09.30 வரை மாலை 4 மணி முதல் 5 மணிவரை இருவேளைகளிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு வழங்குவதற்கு ஆவணம் செய்து கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News