பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ, வெள்ளித் தேரில் அம்மன் எழுந்தருளிய முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-03-07 01:43 GMT

பொள்ளாச்சி..மார்ச்..07  பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது..  இதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 13.ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.

முக்கிய நிகழ்வான வெள்ளித்தேரில் மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது..  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில்  சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கோவிலில் இருந்து இன்று முக்கிய வீதிகள் வழியாக செல்லும் தேரானது வெங்கட்ரமன் வீதியில் நிலைநிறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை கோவிலை வந்தடையும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்..    

Tags:    

Similar News