திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிறைவு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1042 வாக்குச்சாவடிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து

Update: 2024-04-19 16:06 GMT

சீல் வைக்கும் அதிகாரிகள்

 திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1042 வாக்குச்சாவடிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வலுவான பாதுகாப்பு அறைக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தமுள்ள 1042 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் இன்று 6:00 மணி அளவில் நிறைவு பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள வலுவான பாதுகாப்பு அறைக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. தி

ருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 267 வாக்கு மையங்களிலிருந்தும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 267 வாக்கு மையங்களிலிருந்தும் என மொத்தம் 534 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை வலுவான பாதுகாப்பு அறைக்கும் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 261 வாக்கு மையங்களிலிருந்தும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 247 வாக்கு மையங்களிலிருந்தும் என மொத்தம் 308 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் வலுவான பாதுகாப்பு அறைக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.‌

Tags:    

Similar News