மலை உச்சியில் தியானத்தில் ஈடுபட்ட பொன் ராதாகிருஷ்ணன்.

பத்துகாணி காளி மலை உச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் தியானத்தில் ஈடுபட்ட போட்டோ,வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Update: 2024-04-24 15:24 GMT

பத்துகாணி காளி மலை உச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் தியானத்தில் ஈடுபட்ட போட்டோ,வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதியில் பாஜ சார்பில் 10வது முறை யாக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் இடம் எல்லாம் ஏதேனும் கோயிலை மையபடுத்தியே இருந்தது. காலையில் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அவர் பிரசாரத்தை மேற்கொண்டார். கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.பிரசாரம் முடிந்த பிறகும் கோயில்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டிவருகிறார்.

அந்த வகையில் குமரி - கேரள எல்லை பகு தியில் கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத் தில் உள்ள காளிமலை அம்மன் கோயிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது. இதில் பொன்.ராதாகிருஷ்ணனும் பங்கேற்றார். நடந்தே மலைஉச்சி பகுதிக்கு சென்றவர் அங்கு நடந்த ஆன்மிக மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள பாறை ஒன்றில் திடீரென்று தனியே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த மக்களுடன் குழு புகைப்படங்களும் எடுத் துக்கொண்டார். பொன். ராதாகிருஷ்ணன் 3500 அடி உயர மலை உச்சிக்கு சென்று தியானத்தில் ஈடு பட்ட புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News