மாவட்ட நீதிமன்றத்தில் பொங்கல் கொண்டாட்டம்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இணைந்து கொண்டாடிய பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2024-01-12 10:39 GMT

பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாரம்பரிய பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியினை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .இதனைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படியான பரதநாட்டிய நடைபெற்றது.

முன்னதாக பாரம்பரிய விழாக்களில் ஜவ்வுமிட்டாய் இடம்பெறும் என்பதை குறிக்கும் வகையில் பொம்மையுடன் கூடிய ஜவ்வு மீட்டாய் வியாபாரி நீதிபதிகளுக்கு பறவை, மோதிரம் , நெக்லஸ் போன்ற வடிவங்களில் ஜவ்வு மிட்டாயை செய்து கொடுத்த போது நீதிபதிகள் அதனை பெற்றுக் கொண்டு ருசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்து நின்றபடி புகைப்படம் எடுத்து வீரத்தை வெளிப்படுத்தினர் .

இதனைத்தொடர்ந்து, இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்ற நிலையில் மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்ற வழக்கறிஞர் இளவட்ட கல்லை தூக்கி தலையை மூன்று முறை சுற்றி அசத்தினர். இதனையடுத்த , சேவல் சண்டை, கண்கட்டி பானை உடைத்தல், சிலம்பம், சுற்றுதல்கயிறு இழுக்கும் போட்டி , இளவட்டக் கல் தூக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகளை நீதிபதிகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடத்தில் பாரம்பரியபடி பொய்க்கால்குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பசும்பொன் சண்முகய்யா உள்ளிட்ட மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News