கல்லூரியில் பொங்கல் விழா

சேலம் அன்னம்மாள் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2024-01-16 04:47 GMT

சேலம் அன்னம்மாள் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகமெங்கும் கிளைகளை கொண்ட அன்னம்மாள் கல்லூரியின் சேலம் கிளை அன்னம்மாள் கல்லூரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி மூத்த இயக்குனர் குமார், செயல்பாட்டு இயக்குனர் யுவராஜ், துணை இயக்குனர் வினோத்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் மண்டல தலைவர் கவியரசு, கிளை தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் சரவணன், சரண்யா, இஸ்மாயில், உதயம், ஜாபீர், மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News