பொங்கல் பரிசு பணம் பெறாதவர்களுக்கு மீண்டும் வழங்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பணம் பெறாதவர்களுக்கு மீண்டும் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது

Update: 2024-01-20 06:04 GMT


பைல் படம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் கடந்த ஜன.10ம் தேதி முதல் ஜன.14ம் தேதி வரை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பொங்கல் பண்டிகை முடிந்து பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் சென்று கேட்டனர்.ஆனால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 பணம் பெறுவதற்கான பரிவர்த்தனை மிஷினில் நீக்கப்பட்டுள்ளது என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 பணம் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 பணம் வாங்காதவர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News