நொய்யல் நதிக்கரையில் பொங்கல் - காவல் ஆணையர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் தினேஷ் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜி கிரியப்பனவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2024-01-14 07:30 GMT

ஆய்வு 

திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் ஆண்டுதோறும் திருப்பூர் பொங்கல் திருவிழா மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா(2024) முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் திருப்பூர் தெற்கு காவல் துணை ஆணையர்கள் வனிதா, அபிஷேக் குப்தா, துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், மாநகர துணைபொறியாளர்கள் கண்ணன், செல்வநாயகம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு, நிட்மா, ஜீவநதி நொய்யல் சங்கம் சார்ந்த பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்ப உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News