ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா !

கட்டனாச்சம்பட்டி ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பு பூஜை யாக கேள்விகள் நடத்தி அபிஷேகம்..

Update: 2024-04-09 09:38 GMT

பூஜை 

ராசிபுரம் கட்டனாச்சம்பட்டி ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பு பூஜை யாக கேள்விகள் நடத்தி அபிஷேகம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம் பட்டி வன்னியர் தெரு 4.வது வார்டு பட்டு சொசைட்டி அருகில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் அம்மனுக்கு நடைபெற்று வந்தன.

அதன்படி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை 48 ஆம் நாள் நிறைவு விழாவை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் க்கு காசி கங்கை தீர்த்தம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், கோடி தீர்த்தம், காவேரி தீர்த்தம், ஆகாய தீர்த்தம் ஆகிய ஐந்து தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.

இந்த ஹோமம் பூஜையை சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ ஸ்ரீ மது தில்லைநாதர் சிவாச்சாரியார் நடத்தி வைத்தனர். இந்த மண்டல பூஜை நிறைவு விழா ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் மற்றும் நாலாவது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் மேலும் என். கோபால் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வணங்கி சிறப்பித்தனர். இந்த மண்டல பூஜை நிறைவு விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News