குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா, தேரோட்டத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.
Update: 2024-02-06 06:41 GMT
கொடைக்கானல் அருகே மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான, மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நவபாசன சிலையுடன் காட்சி அளிக்கும். இந்த கோயிலில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா, தேரோட்டத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுலா பயணிகளும் இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டு குழந்தை வேலப்பரின் தேரோட்டத்தை ரசித்து வழிபட்டனர். இந்தியாவில் உள்ள மலை கிராமங்களில் தேரோட்டம் பூம்பாறையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.