தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்ட தபால் துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தபால் துறையின் சார்பில், நாகர்கோவில் நாகராஜா திடலில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்திலிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் தபால் ஊழியர்களால் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டு, மக்களாட்சி மீது பற்று கொண்ட இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் செந்தில் குமார், போக்குவரத்துத்துறை பொது மேலாளர் ஜெரோலின், உதவி திட்ட அலுவலர் வளர்மதி, தன்னார்வ அமைப்புகள், SMRV தொழிற்பயிற்சி மாணவிகள், தபால் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.