மணிமுத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி கணவரை கண்டித்து போஸ்டர்
மணிமுத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி கணவரை கண்டித்து போஸ்டர் ஒட்டபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-17 09:17 GMT
ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சி மன்ற தலைவியாக உள்ளவர் அந்தோணியம்மாள். இவரது கணவர் பேரூராட்சி நிர்வாகத்தில் அத்துமீறி தலையிடுவதை கண்டித்து 15வது வார்டு பொதுமக்கள் சார்பாக இன்று காலை மணிமுத்தாறு பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறு போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.