புதிய பேவர் பிளாக் சாலையில் பள்ளம் - தேங்கும் மழைநீரில் நோய் அபாயம்

ஆவுடையார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலையில் தண்ணீர் தேங்குவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-12 06:17 GMT

தேங்கி நிற்கும் மழைநீர் 

 ஆவுடையார் கோவில் தாலுகாவில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு அதன் முகப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உள்ளே சென்று வாகனங்கள் வெளியேறுகின்ற பாதை உட்பட பேவர் பிளாக் போடப்பட்டது இந்த வேலை செய்தவர்கள் சரியாக பேஸ்மட்டம் அமைக்காததால் நடுப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதனால் சிறிய மழைக்கே சாலை நடு பகுதியில் தண்ணீர் தங்கி, அதில் பிளாஸ்டிக் பொருள்கள் சேர்வதால்  தாலுகா ஆபீசுக்கு உள்ளே வரும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த வேலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

Tags:    

Similar News