சிவகாசியில் குண்டும் குழியுமான தார்சாலைகள்
சிவகாசியில் குண்டும் குழியுமான தார்சாலைகள் காட்சியளிக்கிறது.
சிவகாசியில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இரட்டை பாலம்- கட்டளைபட்டி சாலை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைப்பட்டி செல்லும் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.ரோடு போட்ட சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் சேதமடைந்து,
அவ்வப்போது கிராவல் மண் அடித்தும்,ஒட்டு போடும் பணியும் நடந்தது.சிறுகுளம் கண்மாய் கரையை ஒட்டி சாலை அமைந்துள்ளதால் எப்போதும் தண்ணீர் ஓட்டத்தினால் எத்தனை முறை சீரமைத்தாலும் சாலை தாங்காமல் அடிக்கடி சேதம் அடைந்து சாலையில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் சாலை பல இடங்களில் சிதைந்து உள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செல்லும் கனரக வாகனங்கள் டவுனுக்குள் வராமல் இந்த சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன.
குறிப்பாக பள்ளி நேரங்களில் இரட்டை பாலம் முதல் வாட்டர் டேங்க்,கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இந்த சாலை வழியாக மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. விரைவில் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.இந்த சாலையினை முழுமையாக தோண்டி புதிதாக தரமான சாலை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.