குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் - எம்.எல்.ஏ தாரகை கத்பட்
மார்த்தாண்டத்தில் சாலைகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் , குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மார்த்தாண்டத்தில் உள்ள சந்தை மற்றும் பல இடங்களில் பொருட்கள் வாங்க வருபவர்கள் சர்வீஸ் சாலை வழியாகதான் வருவது வழக்கம். இந்த சாலைப்பகுதியில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து தாரகை கத்பர்ட் கூறியதாவது.கடந்த மாதம் 12ம் தேதி மார்த்தாண்டம் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.மழைபெய்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் மார்த்தாண்டம் மேம் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் தார் மற்றும் சல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போன்று காணப்படுகிறது.இதனால் வாகனங்கள் தத்தளித்தவாறு செல்வதை காணமுடிகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு விபத்து பகுதியாக மாறி வருகிறது.
சாலையோர பள்ளங்களால் போக்குவரத்து விதிகளை கடை பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மழை நீர் தேங்கி குளம் போல் காட்சிய ளிக்கிறது.பைக்கில் வருவர்கள் இந்த பள்ளங்களின் ஆழம் தெரியாமல் விழுந்து அடி படுவது வாடிக்கையாக தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரமான முறையில் தார் போட்டு சீரமைக்க வேண்டும். இவ்வாறு விளவங்கோடு எம். எல்.ஏ. தாரகை கத்பர்ட் கூறினார்.