பொத்தரக்கன்விளை பரி திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா!

வெள்ளாளன்விளை சேகரம், பரமன்குறிச்சி அருகிலுள்ள பொத்தரக்கன்விளை, பரி திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா 3 நாட்கள் நடந்தது.;

Update: 2024-06-02 12:33 GMT
பொத்தரக்கன்விளை பரி திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா!

வெள்ளாளன்விளை சேகரம், பரமன்குறிச்சி அரு கிலுள்ள பொத்தரக்கன்விளை, பரி திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா 3 நாட்கள் நடந்தது.


  • whatsapp icon

முதல்நாள் சேகர அளவிலான வாலிபர் கூடுகை பெங்களுரைச் சேர்ந்த சகோ. பிரான்சிஸ், மதுரையை சேர்ந்த பயிற்சி ஆயர் ஜாண்சன் தலைமையில் நடந்தது. மாலை 7 மணிக்கு ஞாயிறு பாட சாலை பிள்ளைகள் மற்றும் ஸ்டீபன் குழுவினரின் கலை நிகழ்ச்சியும்,இரண்டாம் நாள் அதிகாலை 3:30 மணிக்கு ஆலயப் பிரதிஷ்டை பண் டிகை ஆராதனை,பரி.ஞானஸ்நான ஆராதனை, பரி.திருவிருந்து ஆரா தனைகள் சேகரத்தலைவர் தாமஸ் ரவிக்குமார் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் சேகரத் தலைவர் யோபுரத்தினசிங் கலந்து கொண்டு அருளுரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து அசனப்பொருட்களை ஜெபிக்க அசன வைபங்கள் ஆரம்ப மானது. ஆலய கட்டுமானப் பணிக ளுக்கான சிறப்பு ஏலம், மாலை 5 மணிக்கு பொது விருந்து நடந்தது. அசனவிழாவில் சுற்று வட்டார பகு திகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதனை தொடர்ந்து, இரவு 9 மணி க்கு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை சேகர தலைவர் தாமஸ் ரவிக்குமார், சபை ஊழியர் கோல்கி வேதநாயகம், தலைவர் அல்பர்ட் ஜேக்கப், செயலர் ராஜாசிங் ரூபன், பொருளாளர் ஜெபக்கனி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், செல்வி, தர்மராஜ், சால்வேஷன் மற்றும் சபைமக்கள் செய்து இருந்தனர்

Tags:    

Similar News