ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை
கொடைக்கானல் கல்லறை தோட்டத்தில் ராட்சத மரத்திலிருந்து மரக்கிளைகள் முறிந்து உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் தடை ஏற்ப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் கல்லறை மேடு பகுதியில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் உள்ள ராட்சத மரத்தின் மர கிளைகள் முறிந்து உயர் அழுத்த மின் கம்பத்தின் மீதும் மின் கம்பிகளின் மீதும் விழுந்ததால், மேல்மலை கிராமங்களான பூம்பாறை ,மன்னவனூர், கிளாவரை குண்டுபட்டி, கூக்கால், கீழ் மலை கிராமங்களான தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பாச்சலூர் தடியன்குடிசை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது.
உயர் அழுத்த மின் கம்பத்தின் மீதும் மின் கம்பிகளின் மீதும் விழுந்துள்ள மரக்கிளைகளை அகற்றி 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின் இணைப்பை மீண்டும் கொடுக்கும் பணிகளில் 20க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழாமல் கல்லறை தோட்டத்தில் உள்ளேயே விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...