நெல்லை டவுன் ,பழைய பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நெல்லை டவுன் மற்றும் பழைய பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 08:51 GMT

மின்தடை (பைல் படம்)

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 3) டவுன், பழைய பேட்டை பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை டவுன் மேல ரத விதி, பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Tags:    

Similar News