விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.75 லட்சம் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-28 01:44 GMT
 வேலை நிறுத்தம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் பகுதிகளில் வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 50% கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூபாய் 500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று  முதல் சங்கரன்கோவிலில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது .

இதுகுறித்து விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாணிக்கம் கூறியதாவது:- சங்கரன்கோவில் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கூலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஐம்பது சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூபாய் 500 வழங்க கோரி இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நிறைவேற்றும் வரை எங்களது காலவரையற்ற போராட்டம் தொடரும். இதனால் சங்கரன்கோவில் நகரில் மட்டும் சுமார் 5,000 விசைத்தறிகள் இயங்கவில்லை. இவ்வாறு மாணிக்கம் கூறினார்.

Tags:    

Similar News