கந்தர்வகோட்டை சிவன் கோவில் பிரதோஷ வழிபாடு!
கந்தர்வகோட்டை ஆபத்சகாயேசுவரர் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.;
Update: 2024-05-21 03:02 GMT
கந்தர்வகோட்டை ஆபத்சகாயேசுவரர் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கந்தர்வகோட்டை ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு திங்கள்கிழமை 18 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தி வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஆலயத்தில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.