அரசு பேருந்து மோதி கர்ப்பிணி பெண் பலி

மாமண்டூர் சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.;

Update: 2024-01-19 01:58 GMT
விபத்து 
செங்கல்பட்டு மாவட்டம்,மாமண்டூர் சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தில் கணவருடன் அமர்ந்து சென்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து பின்னால் மோதியதில் உயிரிழந்தார். ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி ஒன்றை அரசுப் பேருந்து முந்திச் செல்ல முயன்ற போது தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சியில் அவர் இறந்ததாக படாளம் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News