அமெரிக்காவில் வேலை எனக் கூறி, இளைஞரிடம் ரூ. 7.93 லட்சம் மோசடி

அமெரிக்காவில் வேலை எனக் கூறி, இளைஞரிடம் ரூ. 7.93 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-09 15:26 GMT

கோப்பு படம் 

சமூக வலைதளங்களில் அமெரிக்காவில் வேலை என தகவல் அனுப்பி இளைஞரிடம் ரூ. 7.93 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரின் கைப்பேசிக்கு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வெளிநாட்டு வேலை என 2023, ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது. மேலும், இளைஞரிடம் மர்ம நபர் பேசி அமெரிக்க வேலைவாய்ப்பு பெற விசா,

பயணக்கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். இதை நம்பிய இளைஞர் இணையவழியில் பல்வேறு தவணைகளில் ரூ. 7 லட்சத்து 93 ஆயிரத்து 300 செலுத்தினார்.

ஆனால், மர்ம நபர் கூறியபடி அமெரிக்க வேலைவாய்ப்பு பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. இது தொடர்பாக மர்ம நபரை இளைஞர் தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்புகளைத் துண்டித்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார்.

இதன் பேரில் காவல் துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News