நகைக்கடையில் தங்கச்சங்கிலி வாங்குவது போல் நடித்து தப்பியோட்டம்
மீன்தருட்டி அருகே நகைக்கடையில் தங்கச்சங்கிலி வாங்குவது போல் நடித்து தப்பியோடிவர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
அரியலூர், ஏப். 5: அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே நகைக் கடையில் நகை வாங்குவதுப் போல் நடித்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மீன்சுருட்டி கடைவீதியைச் சேர்ந்த குப்புசாமிக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது. இந்த கடையை அவரது மகன் ஆனந்தகுமார் கவனித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காரில் இருந்து இறங்கி நகைக் கடைக்குச் சென்ற இரண்டு பேர், 5 பவுன்களில் 2 தங்கச் சங்கிலியை காண்பிக்குமாறு கடை உரிமையாளர் ஆனந்தகுமாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து நகைக் கடைகாரர் நகையை எடுத்து கொடுத்துள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர்கள், நகையை யாருக்கோ கட்ச்செவியில் அனுப்பியுள்ளார்.
பின்னர் அவர்கள் வேறு மாடல்களை காண்பிக்குமாறு கூறியதையடுத்து, கடை உரிமையாளர் ஆனந்தகுமார் திரும்பி நகையை எடுத்து காண்பிப்பதற்குள் அந்த நபர்கள் கையில் வைத்திருந்த 10 பவுன்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து காரில் வேகமாகச் சென்றுவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு விடியோவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.