எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உயர்வு
வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் எலுமிச்சை பழம் வரத்து குறைவாக உள்ளது.;
Update: 2024-04-26 10:41 GMT
எலுமிச்சை பழம்
பழனி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் காய்கள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் எலுமிச்சை பழம் வரத்து குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் எலுமிச்சை பழம் வாங்குவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு பழம் ரூ. 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.