தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற செயற்குழு கூட்டம்
மல்லசமுத்திரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற செயற்குழு கூட்டம்;
மல்லசமுத்திரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில், கடந்த செப்.19 ல் ஒன்றிய செயற்குழு கூட்டம் முடிவுகளின்படி, 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நான்கு கட்டத்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பங்களிப்பு செய்த ஒன்றியத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கொடுத்துள்ள உறுதிமொழிகளின்படி ஒன்றிய ஆசிரியர்களின் 12அம்ச கோரிக்கைகளுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் விரைந்து தீர்வு காண வேண்டும். தவறான தணிக்கை தடையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஒன்றிய ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம், பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வையப்பமலை பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் இணைக்கப்பட்டுள்ள மொரங்கம், பாலமேடு முனியப்பன் பாளையம் பள்ளிகளை ராமாபுரம் குருவள மையத்திற்கு செல்லுமாறு பணிப்பதை முற்றிலும் விளக்கிக் கொள்ள வட்டார வள மையம் மேற்பார்வையாளர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்து இந்திய வருமான வரித்துறைக்கு முறையாக தாக்கல் செய்து படிவம் 16 போன்றவற்றை பெற்று வழங்குமாறு 2016 - 17 ஆம் ஆண்டு நிதியாண்டு வருமான வரி கணக்கு தாக்கல்களில் எழுந்துள்ள குறைபாடுகளுக்கு விரைவு தீர்வு கண்டு ஒன்றிய ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரசுவதி, மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருகசெல்வராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.