திருத்துறைப்பூண்டியில் கைதி தப்பி ஓட்டம்
திருத்துறைப்பூண்டியில் கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 10:34 GMT
தப்பியோடிய கைதி
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா வழக்கில் பிரபல ரவுடியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி பிரபல ரவுடி குருமாறன் என்பவர் தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மேலும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட காவலர்கள் ராஜேஷ் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை.