தப்பிய சிறைவாசியை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறைத்துறையினர்

மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய சிறைவாசியை 24 மணி நேரத்திற்குள் சிறை துறையினர் பிடித்தனர்.

Update: 2024-06-14 12:33 GMT

மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய சிறைவாசியை 24 மணி நேரத்திற்குள் சிறை துறையினர் பிடித்தனர்.


மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய சிறைவாசியை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறை துறையினர் மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள புரசரை உடைப்பு திறந்தவெளி சிறை சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது இந்த திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 84 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் சிறைவாசிகளைக் கொண்டு இயற்கை விவசாயம், ஆடு மாடு மேய்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இங்கு சுமார் 51 சிறைவாசிகள் உள்ளனர். இங்கு தண்டனை சிறைவாசியாக இருந்த கோபால் .தகப்பனார் பெயர் கதிர்வேல் போக்சோ தண்டனை வழக்கில் இருந்து வந்த நபர் ஆடு மேய்க்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை ஆடு மேய்க்கும் பணியில் இருந்த பொழுது சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் மதுரை சரக சிறை துறை டிஐஜி திரு. பழனி மற்றும் சிறைத்துறை எஸ். பி சதீஷ்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் மதுரை மாவட்டம் கூடக்கோயில் அருகே உள்ள திருமால் என்ற கிராமத்தில் சிறை தனி படையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறைவாசியை உடனடியாக கைது செய்த சிறை தனிப்படையினரை மதுரை சரக டிஐஜி திரு. பழனி. அவர்கள் பாராட்டினார்.

Tags:    

Similar News