வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு
தனியார் வங்கி ஊழியர் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 06:30 GMT
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ. 1.25 லட்சம் கடன் வாங்கி இருந்தார் . தவணைத் தொகை வசூலிக்க வந்த ஊழியர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்து தரைக்குரவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரில் நிதி நிறுவன மேலாளர் சுதாகர் ஊழியர் முத்து நாகராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்