சிவகாசியில் பணி நியமன ஆணைகளை வழங்கிய தனியார் நிறுவனம்
சிவகாசியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தனியார் நிறுவனம் வழங்கியது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி.எஸ்.ஆர் கல்வி குழுமங்களின் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் இயக்குனர்கள் டாக்டர் அருண்குமார்,விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார்.டீன் மாரிச்சாமி வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாக்கியசீமா,
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எச்.பி.நிறுவனத்தை சேர்ந்த பிரதீப் கலந்து கொண்டு பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிய தேர்வு செய்யப்பட்ட 1380 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது,
மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த ஹர்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களின் அடிப்படைகளை நன்கு தெரிந்து கொண்டால் எந்த நிறுவனங்களில் மாணவர்கள் வேலைக்கு சென்றாலும் சாதிக்க முடியும்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் காசிராமன்,சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.