தனியார் மினி பஸ் ஓட்டுநர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு
தனியார் மினி பஸ் ஓட்டுநர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு. புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-03-19 18:35 GMT
விருதுநகர் கடம்பன்குளம் பகுதியைச் சார்ந்தவர் மகேந்திரன் வயது 34 இவருடைய மனைவி மாரீஸ்வரி மகேந்திரன். தனியார் மினி பஸ்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 17ஆம் தேதி இரவு பணி முடித்துவிட்டு கருப்பசாமி நகரில் உள்ள மினி பஸ் செட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகேந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அங்கு இருந்த சக பணியாளர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்த தகவல் மாரீஸ்வரிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்து கணவரின் உடலை பார்த்த மாரீஸ்வரி அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.