கலைஞர் நூற்றாண்டு விழா - கோவையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Update: 2023-12-01 12:16 GMT

ஆட்சியர் அலுவலகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை:முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில்   தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்மலா கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.இதில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.20 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை  இந்த  வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.இந்நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.எட்டாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு,தொழில் கல்வி பயின்றவர்கள்,செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கபட்டுள்ள நிலையில் முகாமில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது எனவும் மேலும் வேலை வாய்ப்பு குறித்த விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.வேலை வாய்ப்பு தேடுபவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு  மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.
Tags:    

Similar News