தனியார் பள்ளி ஆண்டுவிழா - தம்பிதுரை பங்கேற்பு

வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ சி.வி. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2024-03-19 04:02 GMT

ஆண்டுவிழா 

 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புலியூரில் கிராமத்தில் இயங்கி வரும் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் சபாநாயகரும் முள்ளாள் அமைச்சர் டாக்டர் தம்பிதுரை எம்.பி. கலந்துக்கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீவி.ராஜேந்திரன் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தனர். இதில் மாணவர்களின் திறன்பட்ட சாதனைகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் கூத்தரசன் மாணவர்களில் பெற்றோர் உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News