தனியார் பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கை

மதுராந்தகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கை செய்தனர்.

Update: 2024-05-21 07:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பள்ளிகள் திறக்க 20 நாட்களே உள்ள நிலையில் பள்ளி வாகனங்களை பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டவையா மேலும் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா என முழு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் செய்யூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் 142 வாகனங்களை இன்று செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அபிதா பானு, மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி, திருக்கழுக்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, ஆகியோர் நேரடி பார்வையில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது இந்த தணிக்கையில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், ஆகியோர் கலந்துகொண்டு வாகன ஓட்டுனர்களுக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் ஓட்டுனர்களுக்கு உடல் மற்றும் கண்மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.முக்கியமாக வாகனங்களில் பிரேக் வாகனத்தின் பிளாட்பார்ம் அவசர கதவு வாகனத்தில் சிசிடிவி கேமரா சாலையில் செல்லக்கூடிய அளவிற்கு சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் பராமரிக்கப்பட்டுள்ளதா என முழு சோதனை செய்து வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News