காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் , இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்;

Update: 2024-06-20 01:13 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் , இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் , காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

Advertisement

இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.06.2024 அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News