ஆன்லைன் லாட்டரியில் பரிசு; ரூ. 30 லட்சம் பறிமுதல்

நாகூரில் வாகன சோதனையின் போது, ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்த நபருக்கு வழங்க பணம் கொண்டு வந்த இருவரை கைது செய்த போலீசார், ரூ. 30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-10 15:55 GMT

நாகூரில் வாகன சோதனையின் போது, ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்த நபருக்கு வழங்க பணம் கொண்டு வந்த இருவரை கைது செய்த போலீசார், ரூ. 30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

 நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்ட முழுவதும் லாட்டரி விற்பனையை கட்டுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வாஞ்சூர் சோதனை சாவடி அருகில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது ஒரு வாகனத்தில் காரைக்கால் நேதாஜி நகர் மரிய சூசைநாதன் மகன்அமிர்தாராஜன் வயது 50, காரைக்கால் டி ஆர் பட்டினம் நம் பெருமாள் மகன். உப்பிளியப்பன் வயது 47,ஆகிய இருவரும் சட்டத்திற்கு புறம்பாக எடுத்து வரப்பட்ட ரூபாய் 30 லட்சத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்படி விசாரணையை தொடங்கினர்.

அதில் விசாரணையில் எதிரிகள் சென்னை தாம்பரத்தை சேர்ந்த காசிரங்கன் என்பவர் ஆன்லையன் லாட்டரி வியாபாரம் செய்து வருவதாகவும், நாகூர், சமரச நகரை சேர்ந்த நூருலாமீன் என்பவரின் மகன் முஜிபூர் ரகுமான் (54) என்பவர் Online Lottery No 5510 ல் 6 லாட்டரி சீட்டுகள் வாங்கியதாகவும் அதற்கு பரிசு தொகையாக 6 × 5,00,000 என மொத்தம் 30 இலட்சம் ருபாய் பரிசு தொகையை அவரிடம் வழங்க கொண்டு சென்றதாக கூறியுள்ளர். மேற்படி காவல்துறையினர் அமிர்தாராஜன், உப்பிளியப்பன், முஜிபூர் ரகுமான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்

Tags:    

Similar News