கபாடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் !!

கபாடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-07 08:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம் இளங்காவூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்செறிதல் விழாவை முன்னிட்டு 66 ஆம் ஆண்டு இராமநாதன் சேர்வை நினைவாக நடைபெற்ற கபடி போட்டியினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசுப்புரம் தொடங்கி வைத்தார் தொடர்ந்து  தினங்கள் நடைபெற்றது. ஆட்ட இறுதியில் பாப்பான்பட்டிபரதன் அணி முதல் பரிசினையும் ஆர்.ஆர் டிரேடர்ஸ் புதுக்கோட்டை இரண்டாவது பரிசினையும். கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாவது பரிசினையும். ஆண்டவர் காலேஜ் கோவிலூர் நான்காவது பரிசையும் தட்டி சென்றனர். பரிசு பெற்றவர்களுக்கு காங்கிரஸ் வட்டார தலைவர் ராமா. அர்ஜுனன் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். உடன் நாட்டார்கள் ஊர் பொதுமக்கள் விழா கமிட்டினர் பங்கேறனர். இதன்பின் பேசிய ராமசுப்பு இது போன்ற விளையாட்டுகளில் இப்பொழுதே இளைஞர்கள் ஈடுபட வேண்டும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் அதேபோல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நன்கு படித்து நன்கு வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் இதே போல் விளையாட்டு கவனம் செலுத்தும் இந்தியாவிற்கு பல்வேறு பதக்கங்களை வாங்கி தர நீங்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.
Tags:    

Similar News