தென்னை தொழில் நுட்பங்கள்  குறித்து செயல்முறை விளக்கம்

குமரி மாவட்டத்தில் தென்னை தொழில் நுட்பங்கள்  குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-03-16 07:59 GMT

குமரி மாவட்டத்தில் தென்னை தொழில் நுட்பங்கள்  குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.


குமரி மாவட்டம்  காரவிளை கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் இந்தியன் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இணைந்து விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் வேர் மூலம் மருந்து செலுத்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர் , மேலும் வேர் மூலம் நுண்ணூட்டம் செலுத்துவதினால் பச்சைய அதிகரிக்கும் , குரும்பை கொட்டுதல் குறையும் ,பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி கூடும் ,பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனை தெளிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் தக்கலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் வசந்தி வழிகாட்டுதலின் படி மாணவர்கள் ஆஷ்னி, அக்சா,உண்ணிமாயா உட்பட்ட பல மாணவர்கள் விவசாயிகளுக்கு 3ஜி கரைசல் (இயற்கை பூச்சி விரட்டி ) செய்யும் முறை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். அடுத்த இரண்டு மாதங்கள் இம்மானவர்கள் இந்த பகுதியில் முகாமிட்டு வேளாண்மை தொடர்பான புதிய தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
Tags:    

Similar News