மண்டல பூஜையை முன்னிட்டு ஊர்வலம்
ஐயப்ப பக்தர்கல் திருவிளக்கேந்தியும் கன்னி சுவாமிகள் திருஆபரண பெட்டிகளை சுமந்தும் மற்ற கோவில்களுக்கு சென்ற பின்னர் தற்காலிக மணிமண்டபத்தில் பூஜை மேற்கொண்டனர்;
Update: 2023-12-25 01:43 GMT
மண்டல பூஜை
வடமதுரை பை பாஸ் நால்ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐயப்பன் கோயில் கட்டப்படுகிறது. தற்போது இங்கிருக்கும் தற்காலிக மணிமண்டபத்தில் நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு சப்த கன்னிமார் திருவிளக்கு ஏந்தியும், கன்னி சுவாமிகள் திருஆபரண பெட்டிகளை சுமந்தபடி ஊர்வலமாக உள்ளூரில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கு சென்றனர். பின்னர் பால்கேணி மேட்டில் ஐயப்பனுக்கு தீர்த்தவாரி, அபிஷேகம், தீபாராதனைகள் ,அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை தலைவர் பிரபு, துணைத்தலைவர் சவுந்தரம், செயலாளர் மணிமாறன், பொருளாளர் கணேஷ்குமார் செய்திருந்தனர்.