தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான அவரது வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்று மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
Update: 2024-04-26 04:59 GMT
காவல் நிலையம்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டு பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளனர். ஆனால் மன உளைச்சலில் இருந்த அவர் இன்று அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.