நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-14 13:02 GMT

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பள்ளிபாளையம் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிபாளையம் கருணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு வர்த்தக அணி மேற்கு மாவட்ட தலைவர் பேக்கரி ஆர்.எஸ்..சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்விற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் அவர்கள் வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

இந்த நிகழ்வில் 2023, 2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை தொகுப்பு ,கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டிட கட்டும் உபகரணங்கள் வழங்குதல், 20 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்குதல் , ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்குதல், மகளிர்க்கு சேலை மற்றும் அரிசி வழங்குதல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

மேலும் இந்த இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும், தமிழக வெற்றிக்கழகம் கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News