நீலகிரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் - 4 பேர் கைது.

Update: 2023-11-02 08:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுருந்தனர். அப்போது மைசூரில் இருந்து கக்கனல்லா வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ போதைபொருளை கொண்டு வந்தது தெரிய வந்தது. சுமார் 290 கிராம் எடை கொண்ட இதன் மதிப்பு சுமார் 9 லட்சம் ஆகும். இதையடுத்து கேரளா மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள் வாகனத்தில் கொண்டு வந்த முகமது (27) , நிஜாமுதீன் (25) , முகயது ஷஹால் (28) , முகமது ஜெசிர்(25) ஆகிய நான்கு பேரையும் போலிசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News